விசுவ ஹிந்து பரிஷத் தலைவரின் மரக்கடையை தீ வைத்து கொளுத்திய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ! நடவடிக்கை எடுக்கக்கோரிய இந்து முன்னணி !
By : Kathir Webdesk
விசுவ ஹிந்து பரிஷத் தலைவரின் மரக்கடையை இஸ்லாமியர்கள் தீ வைத்து கொளுத்தியது தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்ட புளியங்குடி நகராட்சியில் , விசுவ ஹிந்து பரிஷத் புளியங்குடி நகர தலைவர் மரக்கடை வைத்து தொழில் செய்து வந்தார். அந்த மரக்கடையை இஸ்லாமியர்கள் சிலர் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதனால் மொத்த மரக்கடையும் சேதமடைந்தது. தீ வைத்து சேதம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் தென்காசி பரபரப்பாக காணப்படுகிறது.
இந்நிலையில் இந்து முன்னணி "தீ வைத்து கொளுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் " என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து இந்து முன்னணி வெளியிட்ட அறிவிப்பில்:
தென்காசி மாவட்ட VHP விசுவ ஹிந்து பரிஷத் புளியங்குடி நகர தலைவர் தொழில் செய்து வந்த மரக்கடையை இஸ்லாமிய அடிப்படை வாதிகள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.V. P. ஜெயக்குமார் மாநில துணைத்தலைவர்.
என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.