Kathir News
Begin typing your search above and press return to search.

சிலை கடத்தியதாக திட்டமிட்டு சிக்க வைக்கப்பட்ட அப்பாவி பூசாரி - கோவில்களை கைப்பற்றும் முயற்சியில் இறங்கிய மர்ம கூட்டம்!

Hindus protest TN Idol wing arresting a septuagenarian pujari who protected the murtis abandoned by HRCE

சிலை கடத்தியதாக திட்டமிட்டு சிக்க வைக்கப்பட்ட அப்பாவி பூசாரி - கோவில்களை கைப்பற்றும் முயற்சியில் இறங்கிய மர்ம கூட்டம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 March 2022 8:49 AM GMT

தனிப்பட்ட விரோதம் காரணமாக கோயில் பூசாரி ஒருவர் சிலை திருட்டு வழக்கில் பொய்யாக சிக்க வைக்கப்பட்டுள்ளதாக சொந்த கிராம மக்களே குற்றம் சாட்டுகின்றனர். 75 வயதான பூஜாரி சூரியமூர்த்தி 2 மூர்த்திகளை மறைத்து வைத்து ரூ.2 கோடிக்கு விற்க முயன்றதாக சிலை பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, போலீசார் சரியாக விசாரிக்கவில்லை என்றும், அப்பாவி ஒருவரை அடைத்து வைத்துள்ளதாகவும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருச்சி மன்னார்கோவில் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மன்னார்சாமி நல்லகத்தாயி அம்மன் கோயிலில் இருந்து காணாமல் போன நல்லகத்தாயி அம்மன், கஞ்சமலை ஈஸ்வரர், ஆஞ்சநேயர், விநாயகர் ஆகிய மூர்த்திகளை கண்டறிய திருச்சி சிலைக்கடத்தல் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். மூர்த்திகளை தேடியபோது அவர்கள் சொந்தமான காத்தாயி அம்மன் கோவிலில் பணியாற்றி வரும் சூரியமூர்த்தியிடம் விசாரணை நடத்தினர். மார்ச் 15 ஆம் தேதி அவரைக் கைது செய்து, நெம்மேலி விசாலாட்சி அம்மன் கோயிலுக்குப் பின்னால் 2 மூர்த்திகளை பூஜாரி மறைத்து வைத்திருந்ததாக அறிக்கை வெளியிட்டனர்.

கைது செய்யப்பட்ட செய்தி தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களால் பரவலாக வெளியிடப்பட்டது. சில இந்து விரோத கூட்டம் பூஜாரியின் பெயரைக் கொச்சைப்படுத்தியது. எவ்வாறாயினும், அறநிலையத்துறை சாமி சிலைகளை கைவிட்டதால் தான், பூசாரி மூர்த்திகளை பாதுகாத்து வந்தார் என்பது தெரிய வந்துள்ளது.

சூரியமூர்த்தியும் அவரது அப்பா நடேசனும் தலைமுறை தலைமுறையாக இரு கோவில்களிலும் சேவை செய்து வருகின்றனர்.இருவரும் நெம்மேலி, மன்னார்கோயில் மற்றும் அருகிலுள்ள பிற கிராமங்களில் வசிப்பவர்களிடையே மரியாதைக்குரிய நபர்கள். சூர்யமூர்த்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சீர்காழியில் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

சூர்யமூர்த்தி சிலைகளை திருடவில்லை என்றும், அவர்களின் எதிர்ப்பையும் மீறி போலீஸார் அவரைக் கைது செய்தனர். 6 தலைமுறையாக அர்ச்சகராக பணியாற்றி வரும் சூரியமூர்த்தியின் குடும்பம், இந்த ஐந்து கிராமங்களிலும் அவரைத் தெரியாதவர்கள் இல்லை.

திருடியதாக கூறப்ப்படும் சிதிலமடைந்த உத்ரபதீஸ்வரர் கோவிலின் உற்சவ மூர்த்திகளான பிரதோஷ நாயகன் மற்றும் அவரது துணைவியார் பிரதோஷ நாயகி சிலை பொதுமக்களின் வேண்டுகோளின்படி நெம்மேலியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் வைக்கப்பட்டது. மேலும், காசி விஸ்வநாதர் கோவிலின் செயல் அலுவலரிடம் அனுமதி பெற்றதாகவும் கூறினர்.

இரண்டு மூர்த்திகளும் கோவிலில் எப்படி வைக்கப்பட்டார்கள் என்பது பற்றிய அனைத்து விவரங்களையும் அவர் அவர்களிடம் சொன்னாலும், போலீசார் உடனடியாக சிலைகளை கைப்பற்றி உண்மைகளை சரிபார்க்காமல் பூசாரியை கைது செய்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News