பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட கோயிலில் ரகசிய அறை திறப்பு ! ஐம்பொன் சிலைகள் மற்றும் பழமையான பூஜை பொருட்கள் கண்டெடுப்பு !
By : Dhivakar
மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர், கருங்காலக்குடி அருகிலுள்ள திருச்சுனை மலைமீதுள்ள அகஸ்தீஸ்வரர் கோயிலில் பூட்டிக் கிடந்த ரகசிய அறை திறக்கப்பட்டது. அதில் 21 வகையான பூஜை பொருட்கள் மற்றும் சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
அகத்தியர் தென்திசை நோக்கி வந்த போது, திருச்சுனை மலை மீது தங்கி மூலவர் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது.அக் கோயில் 13ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆட்சி செய்த சுந்தரபாண்டியன் காலத்தில் கட்டப்பட்டதாகவும், 1954,1978 மற்றும் 2000 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலூர் அருகே அகஸ்தீஸ்வரர் கோவில் ரகசிய அறையிலிருந்து பல்வேறு ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு. பாண்டியர் காலத்தது pic.twitter.com/ERIPmlPcM1
— 𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳 (@tskrishnan) November 25, 2021
அக் கோயிலில் பல ஆண்டுகளாக பூட்டிய ரகசிய அறை இருந்து வருகிறது. இந்நிலையில் அறநிலை துறை ஆணையர் விஜயன் உத்தரவின் பேரில், காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் முன்னணியில், ரகசிய அறையின் பூட்டு திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட அறையில் இருந்த ஐம்பொன்னால் செய்யப்பட்ட பார்வதி அம்மன், விநாயகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சிலைகள். மற்றும் இருபத்தி ஒரு வகையான பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.ரகசிய அறையில் இருந்து எடுக்கப்பட்ட் சிலைகள் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, அபிஷேகம் செய்து அவற்றுக்கு பூஜைகள் நடத்தப்பட்டன.