ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் பாதையை ஆக்ரமித்த கிறிஸ்துவர்கள் ! இந்து முன்னணி புகார் அளித்ததன் விளைவு ஆக்ரமிப்பு அகற்றம் !
By : Dhivakar
வேலூரில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் பாதையை கிறிஸ்துவர்கள் ஆக்ரமித்தனர். ஆக்கிரமிப்பை அகற்ற கோரி இந்து முன்னணி அளித்த புகாரால், ஆக்ரமிப்பு அகற்றப்பட்டது.
வேலூர் மாவட்டத்திலுள்ள, காட்டப்படி ஒன்றியத்துக்குட்ப்பட்ட, பள்ளிக்குப்பம் என்ற பகுதியில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. அந்த கோவிலுக்கு செல்லும் பாதையில் 30 அடிக்கு கிறிஸ்துவர்கள் ஆக்ரமித்துள்ளதாக இந்து முன்னணிக்கு தெரியவந்தது. இந்த "ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்" என வருவாய் துறைக்கு இந்துமுன்னணி புகார் அளித்தது. இதை தொடர்ந்து அந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
இது குறித்து இந்திக்கு முன்னணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் : வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியம் பள்ளிக்குப்பம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயிலுக்கு செல்லும் பாதையில் கிறிஸ்தவர்கள் ஆக்கிரமித்துள்ள 30 அடி பாதையை இந்துமுன்னணி வருவாய் துறைக்கு மனு அளித்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
என்று கூறப்பட்டுள்ளது.