பல்லடத்தில் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து, கட்டிடம் கட்டும் முயற்சி !
By : Dhivakar
கோவில் நிலம் ஆக்கிரமிக்கபடுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து பல்லடம் அருகில் பரபரப்பு ஏற்பட்டது.
சமீப காலமாக கோவில் நிலா ஆக்ரமிப்பு பிரச்னை தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்திலுள்ள கோடங்கிபாளையம் ஊராட்சியிலுள்ள காரணம்பேட்டை என்ற கிராமத்தில், அம்மக்களின் குல தெய்வமாக வணங்கப்படும் வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது. அக்கோவிலுக்கு அருகே, கோவை மாவட்டம், சூலூர் திருவேங்கடம் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்து, கட்டடம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கலெக்டர், வருவாய் துறை, மற்றும் அறநிலையத்துறைக்கு புகார் அளித்தனர். அக்டோபர் 30 அன்று கட்டுமானப் பணிகள் நடந்து வந்ததையடுத்து,அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அப்பகுதி ஒரே பரபரப்பாக காணபட்டது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து விசாரணையை தொடங்கினர்.
"பூர்வீக இடம், எங்கள் மூதாதையர்கள்தான் வழிதடத்துக்காக நிலத்தை கொடுத்தார்கள்" என நிலத்தை ஆக்ரமித்து கட்டிடடம் கட்டும் தரப்பு மழுப்பலாக வாதம் செய்தது.
இறுதியில் தாசில்தார் முன்னிலையில் நிலத்தை அளவீடு செய்யவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
கோயில் நிலங்களை யவராலும் ஆக்ரமிப்பு செய்ய முடியாத வகையில் அறநிலையத்துறை சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்து மத உணர்வாளர்கள் கோரிக்கைவைத்து வருகின்றனர்.