Begin typing your search above and press return to search.
ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 2 ஆயிரம் கனஅடியாக உயர்வு.!
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர்கள் வருவது வழக்கம். தற்போது பொதுமுடக்கம் காரணமாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி வெறிச்சோடி காணப்படுகிறது.
By : Thangavelu
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர்கள் வருவது வழக்கம். தற்போது பொதுமுடக்கம் காரணமாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி வெறிச்சோடி காணப்படுகிறது.
அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு போலீசார் மட்டும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதை காணமுடிகிறது.
இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து சுமார் 2 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் இன்றி ஒகேனக்கல் மெயின் அருவி களையிழந்து காணப்படும் நிலைதான் தற்போது உள்ளது.
Next Story