சுற்றுலா பயணிகள் இன்றி ஒகேனக்கல்லில் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ள பரிசல்கள்.!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

By : Thangavelu
நாடு முழுவதும் அதிகரித்துள்ள கொரோனா தொற்று காரணமாக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதே போன்று தமிழகத்திலும் கொரோனா தொற்று தினசரி பாதிப்புகளாக 10 ஆயிரத்தை கடந்து விட்டது. இதனை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக மாநில அரசு, கொரோனா விதிமுறைகளை வெளியிட்டது.
அதன்படி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து மாநிலத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தளங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
அதே போன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தளமும் மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் இல்லாததால், அனைத்து பரிசல்களும் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் சினிபால்ஸ், தொங்குபாலம், சின்னாறு உள்ளிட்ட பகுதிகள் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
