வீடு, வீடாக சென்று சொட்டு மருந்து வழங்கப்படும்.. சுகாதாரத்துறை செயலாளர் தகவல்.!
வீடு, வீடாக சென்று சொட்டு மருந்து வழங்கப்படும்.. சுகாதாரத்துறை செயலாளர் தகவல்.!

தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார். அதே போன்று மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தனர். தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்துக்கும் அதிகமான முகாம் அமைக்கப்பட்டது.
மேலும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற இடங்களிலும் சொட்டு மருந்து வழங்குவதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. போலியோ முகாம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் 17 ஆண்டுகளாக இளம்பிள்ளை வாதம் நோய் இல்லாத நிலை இருக்கிறது.
மேலும், இன்று சொட்டு மருந்து போட்டுக் கொள்ள இயலாதவர்களுக்கு அடுத்து வருகின்ற 3 நாட்களுக்கு வீடு வீடாக சென்று சொட்டு மருந்து அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.