ஓசூர் பூ மார்க்கெட்டில் காற்றில் பறக்கவிடப்படும் சமூக இடைவெளி.!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் நோயாளிகளின் எண்ணிக்கை தினமும் 30 ஆயிரத்தை தாண்டி செல்கிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் போதுமான இடம் இன்றி இறக்கும் அவலநிலையும் தமிழகத்தில் அரங்கேறி வருகிறது.
By : Thangavelu

இதனிடையே கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை ஊரடங்கை அமல்படுத்தியது. ஆனால் யாரும் முறையாக கடைபிடிக்காமல் சாலைகளில் சுதந்திரமாக சுற்றித்திரிகின்றனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பூ மார்க்கெட்டில் பூ வாங்க வந்தவர்கள் யாரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டம் கூட்டமாக மார்க்கெட்டில் சுற்றி வருகின்றனர். கூட்டம் கூடுவதை தடுப்பதை அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது போன்று கட்டுப்பாடு இல்லாமல் இருக்கும் வியாபாரிகளால் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பூ மார்க்கெட்டுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.