மதமாற்றம் குறித்து புகார் அளித்தவரை மிரட்டி, தாக்கிய ஓசூர் காவல் ஆய்வாளர்.!
மதமாற்றம் குறித்து புகார் அளித்தவரை மிரட்டி, தாக்கிய ஓசூர் காவல் ஆய்வாளர்.!
By : Yendhizhai Krishnan
மதமாற்றத்தை எதிர்க்கும் இந்து முன்னணியினரும் பா.ஜ.கவினரும் தாக்கப்படுவதும் மிரட்டப்படுவதும் வழக்கமாகி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து சமூக சேவை, கல்வி உதவி, பின்தங்கியவர்களுக்கு நிதி உதவி என பல பெயர்களில் நிதியை பெற்றுக் கொண்டு இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக பிரச்சாரம் செய்யும் மிஷனரிகள் உள்ளூர் காவல் துறையினரையும் அரசியல்வாதிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு சுதந்திரமாக மதமாற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அது போன்று ஒசூர் அருகே தேர்பேட்டை என்ற இடத்தில் மதமாற்றம் செய்ய வந்தவர்களை காவல் துறையினரிடம் பிடித்துக் கொடுத்த இந்து முன்னணி அமைப்பினரை காவல் ஆய்வாளர் மிரட்டிய தகவல் வெளியாகி உள்ளது.
அந்தப் பகுதியில் ஜெப வழிபாடு செய்ய வந்ததாக கூறியவரை மதமாற்றம் செய்ய வந்ததாக அப்பகுதி மக்கள் விசாரித்த நிலையில் அவர் தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது இதைத்தொடர்ந்து அப்பகுதி இந்து முன்னணி அமைப்பாளர்களிடம் பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் உதவியுடன் மதமாற்ற வந்தவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்து முன்னணி பொறுப்பாளர் புகார் அளித்துள்ளார். ஆனால் மதமாற்ற வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் புகார் தந்த வரையே காவல் ஆய்வாளர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
மிரட்டப் பட்டவர் இதுகுறித்து உயர்மட்ட இந்து முன்னணி நிர்வாகிகளிடம் தெரிவித்த நிலையில் கோட்ட செயலாளர் உமேஷ் காவல் ஆய்வாளரிடம் பேச சென்றுள்ளார்.
நியாயம் கேட்டு வந்தவரை காவல் ஆய்வாளர் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு சக காவலர் ஒருவருடன் சேர்ந்து தாக்கியுள்ளார். இதை எதிர்த்து உடனடியாக அராஜகத்தில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் மற்றும் தாக்குதல் நடத்திய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணியினர் காவல் நிலையத்தின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ஓசூர் டி.எஸ்.பி இந்து முன்னணியினரிடம் சமாதனப் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் இந்து முன்னணி பொறுப்பாளரைத் தாங்கியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
அரசியலமைப்பு சட்டப் பிரிவு 25 இந்தியர்கள் அனைவரும் எந்த மதத்தையும் தாழுவவும், பின்பற்றவும், பரப்பவும் சுதந்திரம் அளிக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டி மிஷனரிகள் மதமாற்றத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் அதே சட்டப் பிரிவு பொது ஒழுங்கு, ஒழுக்க நெறி, நல வாழ்வு, ஆகியவற்றிற்கு பங்கம் வராதபடி இந்த உரிமைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுவதை மறைத்து வேண்டுமென்றே இந்துக்களை சீண்டும் வகையில் கோவில்களில் மதப் பிரச்சாரம் செய்வது, கோவில் சுவர், கல்வெட்டுக்களில் "இயேசு ஒருவரே ஆண்டவர்" என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு சமூக அமைதியைக் குலைக்கின்றனர்.