Begin typing your search above and press return to search.
ஓட்டல், பேக்கரிகளில் எச்சில் தொட்டு பேப்பர்களை பிரிக்கக்கூடாது.. நீதிமன்றம் உத்தரவு.!
ஒட்டல், பேக்கரிகளில் உணவுப் பொருட்களை பார்சல் செய்யும்போது, பேப்பர்களை பிரிக்க எச்சிலை பயன்படுத்தக் கூடாது என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
By : Thangavelu

அதன்படி எச்சிலை தொட்டு பார்சல் பேப்பர்களை எடுப்பதாலும், கவர்களை திறக்க ஊதவும் செய்கின்ற காரணத்தினால் கொரோனா வைரஸ் தொற்று பரவல் எளிதில் தொற்றிக்கொள்ளும் அபாயம் உள்ளது என்று திருச்செந்தூரைச் சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, மனுதாரரின் ஆலோசனைக்கு பாராட்டுக்கள். உணவக ஊழியர்களுக்கு தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Next Story