தமிழக அரசின் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனைப் பட்டா.. துணை முதலமைச்சர் வழங்கினார்.!
தமிழக அரசின் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனைப் பட்டா.. துணை முதலமைச்சர் வழங்கினார்.!
By : Kathir Webdesk
தமிழகத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு தமிழக அரசு வீட்டுமனை பட்டா வழங்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றும் அங்கீகரிக்கப்பட்ட மாவட்ட செய்தியாளர்களுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். இவர்களுக்கான இடம் வீரபாண்டி அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்தில் ஒதுக்கப்பட்டது. இதற்கான அரசாணையும் அரசாணையும் வெளியிடப்பட்டது.
தேனி மாவட்டத்தில் அங்கீகாரம் பெற்ற பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் 56 பேருக்கு தமிழக அரசின் சார்பில் வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. இதனை பெற்றுக்கொண்ட பத்திரிகையாளர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இதே போன்று மற்ற மாவட்டங்களிலும் விரைவில் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.