இறப்பு, பிறப்பு இன்னும் பிற சான்றுக்கு லஞ்சம்? அனைவரையும் கவர்ந்த பேனரால் அதிர்ந்த அரசு ஊழியர்கள்!
By : Thangavelu
தமிழகத்தில் அரசு தேவைகளுக்காக விண்ணப்பிக்க வேண்டும் என்றால் முதலில் கிராம நிர்வாக அதிகாரியிடம் சான்று வாங்கிய பின்னரே அனைத்து வேலைகளும் நடைபெறும். இதனால் தினமும் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் சான்றிதழ் பெறுவதற்காக மக்கள் கூட்டம் இருப்பதை காணலாம்.
ஆனால் அது போன்று சான்றிழ் பெறுவது என்பது எளிதானது அல்ல. ஒவ்வொரு கையெழுத்து போடுவதற்கும் விஏஓவுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். இதனால் பல ஏழை, எளிய மக்கள் கஷ்டப்பட்டு சம்பாரித்த பணத்தை அவர்களுக்கு லஞ்சமாக அளிக்கும் அவலநிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக திருப்பூர் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.திருப்பூர் மாவட்டம், அவினாசி ஒன்றியம் செம்பியநல்லூரில் பேனர் ஒன்றை யாரோ ஒருவர் வைத்துள்ளார். அதில் முக்கிய அறிவிப்பு எனவும், அந்த பேனரில் தலைப்பாக பெரிய எழுத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு கீழாக மணியக்கார அம்மாவிடம் சென்று யாரும் வாக்குவாதம் செய்ய வேண்டும் என அச்சிடப்பட்டுள்ளது.
அதற்கு கீழாக ஒவ்வொரு சான்று வாங்க எவ்வளவு லஞ்சம் அளிக்க வேண்டும் என்ற தொகை விவரம் அதில் அச்சிடப்பட்டுள்ளது. இதனை கொடுத்தால் மட்டுமே அனைவருக்கும் வந்த காரியம் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவரை மீறி செயல்பட்டால் காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுக்கப்படும் என பேனரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பேனரை கடந்து செல்பவர்கள் அனைவரும் ஒரு இரண்டு நிமிடம் நின்று படித்துவிட்டு செல்கின்றனர். இதனை பிற அரசு ஊழியர்களும் படித்துவிட்டு கண்டும் காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாவட்ட நிர்வாகத்துக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Maalaimalar