Kathir News
Begin typing your search above and press return to search.

500 தமிழக கோவில்களில் தொடங்கும் டிஜிட்டல் உண்டியல் - வசூலில் குறியாகும் அறநிலையத்துறை

அருள்மிகு பழனி ஆண்டவர் கோவில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முயற்சி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

500 தமிழக கோவில்களில் தொடங்கும் டிஜிட்டல் உண்டியல் - வசூலில் குறியாகும் அறநிலையத்துறை
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  21 Aug 2022 1:29 PM GMT

தற்போது இந்தியா முழுவதும் டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் என்பது அதிகமாகவே நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பிரதமர் மோடி அவர்கள் பதவி ஏற்ற பிறகு, டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு மூலை முடுக்குகளிலும் உள்ள மக்கள் தங்களுடைய அன்றாட நடவடிக்கைகளில் கூட பணத்தை பயன்படுத்தாமல் டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றத்தை செலுத்துகிறார்கள். ஒரு ஸ்மார்ட் போன் மூலமாக, பணத்தை நேரடியாக வைத்துக்கொள்ளாமல் டிஜிட்டல் முறையில் பேமெணட் செய்யும் இந்த ஒரு முறையை மக்கள் அதிகமாக வரவேற்கிறார்கள். அந்த வகையில் தற்போது இந்தியாவில் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு பணம் செலுத்தும் போது, இந்த டிஜிட்டல் முறை தற்போது வர உள்ளது.


அந்தவகையில் இதற்கான சோதனை ஓட்டம் தற்போது அருள்மிகு பழனி ஆணடவர் கோவிலில் நடைபெற்றது டிஜிட்டல் முறையான டெபிட் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துதல் மற்றும் UPI மூலமாக பணம் செலுத்தும் டெமோ நிகழ்ச்சி நடைபெற்று வெற்றிகரமாக இந்த சோதனை ஓட்டம் நிறைவு பெற்றது. மேலும் SBI வழங்கும் சாதனங்கள் மற்றும் பல வங்கிகள் உடைய சாதனங்கள் இவற்றுக்கு உறுதுணையாக இருந்ததாகவும் கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.



இதுபற்றி தமிழக இந்து சமய அறநிலையத்துறை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறுகையில், "ஆகஸ்ட் 24 அன்று 500க்கும் மேற்பட்ட கோயில்களில் தொடங்கப்படும். ஏற்கனவே 1600க்கும் மேற்பட்ட சாதனங்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் பல கோவில்களில் இத்தகைய டிஜிட்டல் முறை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

Input & Image courtesy:Twitter post

Next Story
கதிர் தொகுப்பு
Trending News