சேலம்: மனைவி மது வாங்க பணம் கொடுக்காததால் வீட்டை கொளுத்திய கணவன்.!
சம்பவத்தன்று குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டு குமார் சண்டையிட்டுள்ளார். அப்போது பழனியம்மாள் பணம் இல்லை என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குமார் தனது வீட்டை கொளுத்தியுள்ளார். இதனால் வீட்டை இழந்த பழனியம்மாள் தனது பிள்ளையுடன் நடுத்தெருவில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

By : Thangavelu
குடிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காத ஆத்திரத்தில் தனது சொந்த வீட்டையே கணவன் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ளது சம்பளகாடு என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பழனியம்மாள். இத்தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ள நிலையில், குமாருக்கு குடிபழக்கம் இருந்துள்ளது. இதனால் குடிபழக்கத்திற்கு அடிமையாகியதால் தினமும் வேலைக்கு செல்லாமல் தனது மனைவியிடம் (குமார்) பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். பழனியம்மாள் மட்டும் அருகாமையில் உள்ள செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று தனது பிள்ளைகளை வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டு குமார் சண்டையிட்டுள்ளார். அப்போது பழனியம்மாள் பணம் இல்லை என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குமார் தனது வீட்டை கொளுத்தியுள்ளார். இதனால் வீட்டை இழந்த பழனியம்மாள் தனது பிள்ளையுடன் நடுத்தெருவில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
வீட்டில் இருந்த ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பிள்ளைகளின் புத்தகம் உள்ளிட்டவைகள் எரிந்து விட்டதாக பழனியம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து போலீசார் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். வீட்டை இழந்து நிற்கும் பழனியம்மாளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
