Kathir News
Begin typing your search above and press return to search.

"தந்தை தொடங்கிய கட்சிக்கும் எனக்கும் தொடர்பு இல்லை"- நடிகர் விஜய் மறுப்பு.!

"தந்தை தொடங்கிய கட்சிக்கும் எனக்கும் தொடர்பு இல்லை"- நடிகர் விஜய் மறுப்பு.!

தந்தை தொடங்கிய கட்சிக்கும் எனக்கும் தொடர்பு இல்லை- நடிகர் விஜய் மறுப்பு.!
X

Saffron MomBy : Saffron Mom

  |  5 Nov 2020 8:02 PM

நடிகர் விஜய் அரசியல் கட்சி பதிவு செய்ததாக தந்தி டிவி சில மணி நேரங்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்நிலையில் விஜய்க்கே தெரியாமல் விஜய் பெயரில் கட்சி பதிவு செய்யப்பட்டதாக பாலிமர் செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளது. அவரது தந்தை சந்திரசேகர் குறிப்பிடுகையில், கட்சி தொடக்கம் குறித்து விஜய்க்கு தெரியாது என்றும் கட்சிக்கும் விஜய்க்கும் சம்பந்தமில்லை என்றும் அரசியல் கட்சி பதிவு செய்தது தமது சொந்த விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் அங்கீகாரம் கிடைக்க கட்சி தொடக்கம் என்றும் கட்சியில் இணைவாரா என்பதை விஜய் தான் சொல்ல வேண்டும் என்றும் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

செய்தியின்படி நடிகர் ஜோசப் விஜய் தன்னுடைய 'விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் இருந்த ரசிகர் மன்றங்களை / நற்பணி இயக்கங்களை பெயர் மாற்றி, முழுமையான அரசியல் கட்சியாக மாற்றி விட்டதாகவும் அதற்கு 'அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயர் வைத்து பதிவு செய்திருப்பதாகவும் தந்தி டிவி செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியின் படி இந்த கட்சியின் தலைவராக பத்மநாபன் பெயர் பதிவு செய்யப்பட்டு, விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் பொதுச் செயலாளராகவும் அவரது தாய் ஷோபா பொருளாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து நடிகர் விஜய் கூறுகையில், தந்தை தொடங்கிய கட்சிக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளதாக பாலிமர் செய்திகள் தெரிவித்துள்ளது. இந்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகி உள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News