செட்டி நாடு குழுத்தில் நாடு முழுவதும் 50 இடங்களில் ஐடி ரெய்டு.!
செட்டி நாடு குழுத்தில் நாடு முழுவதும் 50 இடங்களில் ஐடி ரெய்டு.!
By : Kathir Webdesk
நாடு முழுவதும் செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.
அதேபோன்று அந்நிறுவனத்திற்கு தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் கிளைகள் உண்டு. இங்கும் சோதனையை வருமானவரித்துறை விரிவு படுத்தியுள்ளது. வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் வரி ஏய்ப்பு செய்த காரணத்தால் தொடர்ந்து பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த வாரம் மதுரை ஹெரிடேஜ் குழுமத்திற்கு சொந்தமான 5 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் காட்டப்படாத வகையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது.