Begin typing your search above and press return to search.
ஸ்டாலின் நினைத்தால் எலான் மஸ்க் உடன் சாப்பிட முடியும் - வைரமுத்துவின் முதல்வர் பெருமை

By :
கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனின் பேரன் திருமண விழா சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், இதில் பங்கேற்ற வைரமுத்து பேசியதாவது: முதலமைச்சர் ஸ்டாலின் எளிமையைப் பற்றி சொல்வதற்கு ஆசைப்படுகிறேன். இதில் பங்கேற்றிருப்பதே அவருடைய எளிமைதான்.
அவர் நினைத்திருந்தால் அதானி, அம்பானியோடு உணவருந்த முடியும். இன்னும் சொல்லப்போனால் பில்கேட்ஸ், எலான் மஸ்க்கோடும் உணவருந்த முடியும். தற்போது அவ்வளவு உயரத்தில் இருக்கிறது. ஆனால் அவர் உணவருந்த ஒரு நரிக்குறவரின் வீட்டை தேர்ந்தெடுத்தார். இதன் மூலம் தரையில் இருக்கின்ற மக்களை பார்க்கிறார். இவ்வாறு வைரமுத்து பேசினார்.
Source, Image Courtesy: Daily Thanthi
Next Story