உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் டிவிவை ஆப் பன்னிக்கலாம்! சமஸ்கிருத வழக்கில் உயர்நீதிமன்றம் சாட்டையடி!
உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் டிவிவை ஆப் பன்னிக்கலாம்! சமஸ்கிருத வழக்கில் உயர்நீதிமன்றம் சாட்டையடி!

மதுரையை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில் பொதிகை தொலைக்காட்சியில் 15 நிமிட சமஸ்கிருத செய்தி அறிக்கையை வாசிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும்.
மேலும் அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளின் வளர்ச்சிக்கும் சம அளவு முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மனுதாரருக்கு தேவையில்லை எனில் தொலைக்காட்சியை அனைத்து வைத்துக்கொள்ளலாம் அல்லது சேனலை மாற்றிக்கொள்ளலாம். இதனைவிட முக்கியமான பிரச்னைகள் பல உள்ளன என வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ள விடாமல் சிலர் தமிழகத்தில் தடுத்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு சாட்டையடியாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.