செவ்வேலி அம்மன் கோவில் அருகே சட்டவிரோத கிறிஸ்தவ ஜெப கூட்டம் - காவல்துறை அடாவடி!
குமரி மாவட்டம் சபரி அம்மன் கோவில் அருகே சட்ட விரோதமாக கிறிஸ்துவ ஜெப கூட்டம் நடத்துவதற்கு காவல்துறை பூரண அனுமதி.
By : Bharathi Latha
குமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் அருகில் உள்ள செவ்வேலி அம்மன் கோவில் சட்டத்திற்கு புறம்பாக கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு காவல்துறையும் உடந்தையாக தான் இருக்கிறது. குறிப்பாக செவ்வேலி அம்மன் கோவில் திருவிளக்கு பூஜை நடந்து கொண்டிருக்கும், சமயத்தில் அதற்கு அருகில் உள்ள இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கிறிஸ்தவர்கள் சட்டத்திற்கு புறம்பாக கிறிஸ்துவ மத கூட்டத்தை நடத்தி இருக்கிறார்கள் மற்றும் இந்து அமைப்பினர் சார்பில் பா.ஜ.க தேவதாஸ் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்தார். காவல் துறையிடம் முறையிடும் பொழுது புதுக்கடை காவல் இன்ஸ்பெக்டர் ஒரு கிறிஸ்துவர் என்பதால் அந்த மது கூட்டத்திற்கு முழுமையாக ஒத்துழைப்பு தந்து இருக்கிறார்.
குறிப்பாக அந்த இன்ஸ்பெக்டர் கூறும் பொழுது, நான் ஒரு கிறிஸ்துவன். கட்டாயம் இந்த மத கூட்டம் நடந்தே தீரும். உங்களால் முடிந்ததை பாருங்கள் என்று கூறி இருக்கிறார். குறிப்பாக 2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு சர்ச்சை போது கூட கோவில் அருகில் சட்டத்திற்கு புறம்பாக மதக்கூட்டம் நடைபெறக்கூடாது என்று ஏற்கனவே ஆர்.டி.ஓ விடுக்கப்பட்டிருந்த ஒரு சூழலில் இன்ஸ்பெக்டர் எதையும் பொருட்படுத்தாது இவற்றை நடத்திய தீர வேண்டும் என்று மூன்று மணி நேரம் ஜெபக்கூட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது.
மேலும் கோயில் திருவிழாவின்போது பயன்படுத்தும் ஒலிபெருக்கிகளின் அளவையும் குறைக்குமாறு கோவில் நிர்வாகத்துடன் கேட்டுக் கொண்டதாகவும் கூறப் பட்டிருக்கிறது. ஜெபம் நடத்தும் ஊழியர்கள் கோவில் நிர்வாகத்திடம் ஜெபத்தில் எந்த ஒரு தடை ஏற்படாத வகையில் தங்கள் ஒலிபெருக்கியின் அளவை குறைக்க வேண்டும் என்றம் வலியுறுத்தியதாக கூறப்பட்டிருக்கிறது. இதற்கு காவல்துறையின் முழு அளவில் ஆதரவு தந்து இருக்கிறது.
Input & Image courtesy: Twitter Source