இந்தியாவில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்காளதேச நபர்: சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவு என்ன?
இந்தியாவில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்காளதேச நபருக்கு உயர் நீதிமன்றம் விதித்த தண்டனை.
By : Bharathi Latha
உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் அண்டை நாட்டைச் சேர்ந்த பல்வேறு நபர்கள் குடியேறி வருகிறார்கள். அந்த வகையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்காள பிரதேசத்தை சேர்ந்த நபருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இவை தற்பொழுது 10 மாதங்களாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. வங்காளத்தை சேர்ந்தவர் முஹம்மது மொய்தீன் இவர் மீது ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயாரித்ததாகவும், உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் தங்கி இருந்ததாகவும் திருப்பூர் காவல் துறை கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் இவருக்கு மூன்று ஆண்டுகள் ஜெயில் தண்டனை, மேலும் பத்தாயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது மற்றும் குற்றவாளிகளுக்கு பத்து மாதம் சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் தீர்ப்பு அளிக்கப்பட்டது. மூன்றாண்டு சிறை தண்டனை தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று இவர் தற்பொழுது உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வகையில் நீதிபதி சிவஞானம் தலைமையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
வாழ்வாதாரத்துக்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக இவர்கள் இந்தியா வந்து இருந்ததும் இந்தியாவில் மனுதாரர் மீது எந்தவிதமான குற்றமும் இல்லை. மேலும் இவர் ஆதார் உள்ளிட்ட போலி ஆவணங்களை தயாரித்ததற்கு ஆதாரம் இல்லை என்று நிரூபிக்கப்பட்டு இவருடைய தண்டனை தற்பொழுது குறைக்கப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News 18