Kathir News
Begin typing your search above and press return to search.

தேசிய கல்வி கொள்கை அமல்படுத்துங்க - யு.ஜி.சி. தலைவர் அதிரடி!

தேசிய கல்வி கொள்கை அமல்படுத்துங்க - யு.ஜி.சி. தலைவர் அதிரடி!

ThangaveluBy : Thangavelu

  |  26 April 2022 1:46 PM GMT

தேசிய கல்வி கொள்கையை உடனடியாக அமல்படுத்த பல்கலைக்கழகங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) தலைவரும், பேராசிரியருமான எம்.ஜெகதீஷ் குமார் பேசியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி தொடங்கி வைத்து உரையாற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளராக பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் மற்றும் பேராசிரியர் எம்.ஜெகதீஷ் குமார் கலந்து கொண்டார்.

இதன் பின்னர் அவர் மாநாட்டில் பேசியதாவது: நாடு முழுவதும் 1,050 பல்கலைக்கழகங்கள் உள்ளது. அதில் 400 தனியார் பல்கலைக்கழகங்கள் ஆகும். அதே போன்று 43 ஆயிரம் கல்லூரிகள் உள்ளது. கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத்தை சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் படித்து வருகின்றனர். எனவே அவர்கள் அனைவருக்கும் உயர்தர கல்வி கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் அவர்களின் வாழ்வு மேம்படும்.

100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்த கல்வி நிலை தற்போது இல்லை. அது மாற்றம் கண்டுள்ளது. தொழில்நுட்பங்கள் வளருவதால் கல்வி வளர்ச்சியும் மாறி வருகிறது. இன்னும் 10 ஆண்டுகளுக்குள் தொழில்நுட்பத்தில் மாற்றம் ஏற்படும். அதற்காக அனைவரும் தயாராக இருப்பது அவசியம். எனவே கல்வி கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்கப்படுவதற்கு நடவடிக்கையை எடுப்பது அவசியம். இதன் மூலம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்க முடியும். அதே சமயம் தேசிய கல்விக் கொள்கையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வேண்டும். இதனை உடனடியாக அமல்படுத்துவது சிறந்தது என்றார்.

Source, Image Courtesy: Asianetnews

Next Story
கதிர் தொகுப்பு
Trending News