Kathir News
Begin typing your search above and press return to search.

முதல்வர் குடும்பம் துபாய்க்கு அரசு செலவில் சென்றதா? RTI மூலம் கிடைத்த தகவல் என்ன?

முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணத்திற்கு தமிழக அரசு பணம் செலவிடப்பட்டதா என்ற கேள்விக்கு முக்கிய தகவல் கிடைத்துள்ளது.

முதல்வர் குடும்பம் துபாய்க்கு அரசு செலவில் சென்றதா? RTI மூலம் கிடைத்த தகவல் என்ன?

Mohan RajBy : Mohan Raj

  |  7 Jun 2022 11:36 AM GMT

முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணத்திற்கு தமிழக அரசு பணம் செலவிடப்பட்டதா என்ற கேள்விக்கு முக்கிய தகவல் கிடைத்துள்ளது.

துபாயில் நடைபெற்ற உலக வர்த்தக கண்காட்சியில் தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசு அதிகாரிகள் சென்றனர் கூடவே முதல்வர் ஸ்டாலினின் மனைவி, மகன், மகள், மருமகன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சென்றனர்.

அரசு செலவில் இப்படி முதல்வர் குடும்பம் சென்று அங்கு செல்லலாமா? என கேள்வி எழுந்த நிலையில் அதுகுறித்து பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன.


இந்நிலையில் முதலமைச்சர் துபாய் பயணம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு தகவல்களை கோரியிருந்தது.

அதன் அடிப்படையில் கிடைத்த தகவல்களை வெளியிட்டுள்ளது தனியார் தொலைக்காட்சி. அதன்படி அரசு முறை பயணமாக கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை ஒரு முறை மட்டுமே துபாய் சென்றதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் செயலாளர் உதயச்சந்திரன், டாக்டர் உமாநாத், எம்.எஸ்.சண்முகம், அனு ஜார்ஜ் முதல்வரின் முதன்மைச் செயலாளர் தினேஷ் குமார் மற்றும் இரு பாதுகாப்பு அலுவலர்கள் உடன் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதலமைச்சரின் பயணத்தின் செலவு உணவு மற்றும் தங்குமிட செலவு பற்றிய கேள்விக்கு முதலமைச்சரின் துபாய் பயணத்தின் செலவின பட்டியல் ஏதும் பெறப்படவில்லை என பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டும் சரிவர பதில் கிடைக்காத காரணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Source - News 18 Tamil Nadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News