மாஸ் திட்டம்! தீ விபத்து ஏற்பட்டால் இனி 5 விநாடிகளில் தகவல் தெரிவிக்கலாம்!
மாஸ் திட்டம்! தீ விபத்து ஏற்பட்டால் இனி 5 விநாடிகளில் தகவல் தெரிவிக்கலாம்!
By : Kathir Webdesk
தீயணைப்பு துறையினரின் மீட்பு பணியை துரிதப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘தீ’ செயலியை அனைவரும் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டுமென தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புதுறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
நமது நாட்டில் பெரும்பாலான விபத்துகளில் முக்கியமானவை தீ விபத்து ஆகும். ஒரு இடத்தில் தீ விபத்து ஏற்படும் பட்சத்தில் அந்த இடத்தில் முதன் முதலாவது நிற்கின்றவர்கள் யார் என்றால்.. தீயணைப்புத்துறையினர் மட்டும்தான். தங்களது உயிர்களை பற்றி கவலைப்படாமல் பொதுமக்களின் உயிர்களை மீட்க போராடுவார்கள். அப்படி பட்ட தீயணைப்புத்துறையினருக்காக தமிழக அரசு புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது.
இந்த செயலி இந்தியாவிலேயே முதன் முறையாக ‘தீ’ என்ற புதிய செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதனை அனைத்து மக்களும் தங்களது ஆண்ட்ராய்டு செல்போவில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். ஒரு இடத்தில் விபத்து ஏற்படும் பட்சத்தில் அந்த செயலியின் மூலமாக தகவல் அளித்தால், 5 விநாடிகளில் அனைத்து தகவல்களும் தீயணைப்புத்துறை கட்டுப்பாட்டு அறைக்கு சென்றுவிடும் என தீயணைப்புத்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியுள்ளார்.
எனவே ஒவ்வொரு மக்களும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து வைத்து கொள்வது நல்லது. எங்கேயாவது தீ விபத்து ஏற்படும் பட்சத்தில் தகவல் தெரிவிக்க உதவிகரமாக அமையும்.