கோவில் நிலத்தில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை தேவை: நீதிமன்றம் கெடுபிடி!
கோவில் நிலங்களில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்காத ஊராட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு.
By : Bharathi Latha
கோவில் நிலங்களில் தற்போது பல்வேறு விதமான கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. கோவிலுக்கு சொந்தமான நிலம் என்பதால் பல்வேறு நபர்களும் அவற்றை தன்னுடைய சொந்த நிலம்போல் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளைகள் மனு ஒன்று தாக்கல் செய்து இருக்கிறார். குறிப்பாக அவர் கூறுகையில், கோதண்டராமசாமி கோயிலுக்கு சொந்தமான ஒன்பது ஏக்கர் நிலம் இங்குள்ள போலீஸ் நிலையம் எதிரில் இருக்கிறது.
இந்த இடத்தில் சில்வர் பட்டறை கழிவுகள், கோழி மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டி எரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு இருக்கிறார். இதனால் சுற்றுப்புற சூழல் மாசுபடுகிறது. இரவு நேரங்களில் சமூகப் விரோதிகள் நடமாட்டமும் அதிகமாக இருக்கிறது. கோவில் நிலங்களில் கழிவுகள் கூட்டப்படுவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இந்த வழக்கு விசாரணை செய்த நீதிபதிகள் கோவில் நிலத்தில் கோழி கழிவுகள், ரசாயன கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுகள் தடுப்பதை ஊராட்சிகள் கண்காணிக்க வேண்டும். ஊராட்சியின் குப்பை வண்டிகளும் அங்குதான் நிறுத்தப்படுகிறது.
பொதுத்துறை கால்வாய் கழிவுகள் கொட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த விசாரணை முடிவில் தனது பணியும் முறையாக செய்யத் தவறிய அலுவலர்கள் மற்றும் பஞ்சாயத்துத் தலைவர்கள் மீது சட்டப்படி கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அறநிலையத்துறை சார்பில் சேதமடைந்த வேலையை சீரமைக்க உத்தரவிட வேண்டும் என்று நீதிபதிகள் கூறி இருக்கிறார்.
Input & Image courtesy: Dinakaran