Kathir News
Begin typing your search above and press return to search.

மதுரையில் முத்தரையர் சமூக மக்களை சிலை விவகாரத்தில் குழப்பும் தி.மு.க.!

மதுரையில் முத்தரையர் சமூக மக்களை சிலை விவகாரத்தில் குழப்பும் தி.மு.க.!

மதுரையில் முத்தரையர் சமூக மக்களை சிலை விவகாரத்தில் குழப்பும் தி.மு.க.!

Mohan RajBy : Mohan Raj

  |  9 Nov 2020 5:25 PM GMT

தி.மு.க'வின் சாதி தொடர்பான வாக்கு வங்கி அரசியல் அனைவரும் அறிந்ததே, வெளியே சாதி இல்லை என பேசுவார்கள் ஆனால் சாதி பார்த்தே தேர்தலில் சீட்டு தருவதும், சாதி பார்த்தே கட்சி பொறுப்பாளர்கள் நியமிப்பதும், சாதி பார்த்தே மாவட்ட செயலாளர்கள் நியமிப்பதும் தி.மு.க'வின் செயல்களில் வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் மதுரையில் முத்தரையருக்கு சிலை வைப்பதில் தி.மு.க உட்கட்சி மோதல் வெடித்துள்ளது.

முத்தரையர் சமூகம் பா.ஜ.க'வின் பக்கம் செல்ல துவங்கியுள்ள நிலையில் முத்தரையர் சமூகத்தை ஈர்க்க மதுரையில் முத்தரையருக்கு சிலை வைப்பதில் திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ ஆர்வம் காட்டி அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். ஆனால் சொந்தக்கட்சிக்குள்ளே வேட்டு வைப்பது போல் தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ முத்தரையர் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

மதுரைக்குட்பட்ட சட்டமன்றத்தொகுதிகளில் ஒன்று திருப்பரங்குன்றம். இந்த தொகுதியில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது தி.மு.க தலைவர் ஸ்டாலின் தனது வேட்பாளரான டாக்டர்.சரவணனை ஆதரித்து வலையங்குளம் கிராமத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசியவர் ஸ்டாலின் "டாக்டர்.சரவணன் வெற்றி பெற்றால் இங்கே முத்தரையர் மக்களின் சமூகத்தலவரான "பெரும்பிடுகு முத்தரையர்" வெங்கலச்சிலை நிறுவப்படும்" என்று வாக்குறுதியளித்தார்.

அதன் பிறகு டாக்டர்.சரவணன் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் ஸ்டாலின் குடுத்த வாக்குறுதி காரணமாக எம்.எல்.ஏ டாக்டர் சரவணன் பெரும்பிடுகு முத்தரையருக்கு சிலை வைக்க சுவாமி மலையில் இருக்கும் சிற்பி ராகவனிடம் சுமார் 8 அடி உயரமுள்ள சிலை செய்ய சுமார் 8 லட்சம் செலவு செய்து ஆர்டர் கொடுத்துள்ளார்.

ஆனால் திருப்பரங்குன்றம் தொகுதி தெற்கு மாவட்டத்திற்குள் வருகிறது. ஆனால் சம்மந்தமே இல்லாத தி.மு.க வடக்கு மாவட்டச்செயலாளரும், கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ'வுமான மூர்த்தி திருப்பரங்குன்றம் தொகுதிக்குள் நுழைந்து முத்தரையர் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும். அந்த மக்களிடம் சென்று முத்தரை சிலை நாங்கள் வைத்து தருகிறோம் என்று பேச, அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் ஏற்கனவே 'எம்.எல்.ஏ டாக்டர்.சரவணன் சிலை வைப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து சிலையும் செய்து முடித்துவிட்டார். நீங்கள் என்ன புதுசா சிலை வைக்க போறீங்க. அவரும் திமுக எம்எல்ஏ தானே.! பிறகு ஏன் நீங்கள் வந்து குழப்பத்தை ஏற்படுத்துறீங்கனு' என்று கேட்டதும். "இல்ல..இல்ல எல்லாமே தி.மு.க தான்னு" சொல்லி தி.மு.க எம்.எல்.ஏ மூர்த்தியும், மாவட்டச்செயலாளர் மணிமாறனும் நழுவி விட்டார்களாம்.

போதாக்குறைக்கு அந்த சிலை திறப்பு விழாவில் வேறு என்ன பஞ்சாயத்து வருமோ என முத்தரையர் சமூக மக்கள் பேசி வருகின்றனர். எப்படியோ முத்தரையர் மக்களை குழப்பியாவது ஒரு சிலையை அவர்களுக்கு குடுத்து அவர்களின் வாக்குகளை வாங்க தி.மு.க முயற்சிக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News