கோவில் நிலத்தில் ஆஸ்பத்திரி கட்டிடம்: அறநிலையத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது?
கோவில் நிலத்தில் ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டும் வரை இந்து சமய அறநிலையத்துறை என்ன செய்து கொண்டு இருந்தது? என உயர் நீதிமன்றம் கேள்வி.
By : Bharathi Latha
கோவில் நிலத்தில் ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டுவது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக இந்த வழக்கில் மதுரை மாவட்ட கலெக்டர், நகராட்சி கமிஷனர் ஆகியோர் ஆஜராகி விளக்கம் தந்து இருக்கிறார்கள். இந்த வழக்கு முழுமையாக விசாரணை செய்த நீதிபதிகள் மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மதுரை சின்ன அனுப்பானடி பகுதியை சேர்ந்த சோணை முத்து, மாதவன், தட்சிணாமூர்த்தி ஆகியோர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள்.
குறிப்பாக 400 ஆண்டுகள் பழமை வாழ்த்த குருநாதசுவாமி கோவில் இங்கு உள்ளது. இந்த கோவில் தற்போது இந்த சமய அறநிலை துறை கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இந்தக் கோவில் நிலத்தை ஒரு தரப்பினர் ஆக்கிரமித்து இருந்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருக்கிறது. விசாரணை முடிவில் அந்த சொத்துக்கள் அனைத்தும கோவிலுக்கு சொந்தமானது என்று தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த பொழுதும் மதுரை கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் ஆஜராகி இருந்தார்கள். எந்த அடிப்படையில் மாநகராட்சி சார்பில் ஆஸ்பத்திரி கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இடம் கோவிலுக்கு சொந்தமான என வருவாய் துறை ஆவணங்கள் உள்ளது. இந்த விவகாரத்தில் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டது ஏன்? என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தார்கள். பின்னர் இந்த இடத்தில் ஆஸ்பத்திரி கட்டுவதற்கு தடை விதிக்கப்பட்ட இருக்கிறது.
Input & Image courtesy: News