தற்போதைய சூழலில் 6,7,8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படாது.. அமைச்சர் செங்கோட்டையன்.!
தற்போதைய சூழலில் 6,7,8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படாது.. அமைச்சர் செங்கோட்டையன்.!
By : Kathir Webdesk
கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் தமிழகத்தில் 9,10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே 6,7,8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுமா என்று பெற்றோர்களிடையே குழப்பமான கேள்விகள் எழுந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: இன்றைய சூழ்நிலையில் 6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றும் தற்போது 98.5 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருக்கின்றனர் எனவும் கூறினார். மேலும், 6,7,8ம் வகுப்புகளுக்கு டேப் விரைவில் வழங்கப்படும் எனக் கூறினார்.
அமைச்சர் அளித்துள்ள பேட்டிக்கு பின்னர் பெற்றோர்கள் குழப்ப நிலையில் இருந்து விடுப்பட்டுள்ளனர். எங்கே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் கொரோனா வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருந்து அவர்கள் விடுபட்டுள்ளனர்.