வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய எம்.ஜி.எம். குழுமத்தில் 3வது நாளாக சோதனை!

தமிழ்நாடு முழுவதும் உள்ள எம்.ஜி.எம். குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக வருமானவரி சோதனை தொடர்கிறது.
எம்.ஜி.எம். நிறுவனமான தீம்பார்க், மதுபான உற்பத்தி ஆலைகள் உட்பட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் இதன் குழுமத்தின் சார்பில் நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், நட்சத்திர ஓட்டல்களும் எம்.ஜி.எம். குழுமத்தால் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் நட்சத்திர ஓட்டல்களை இந்த நிறுவனம் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் சென்றது. இது தொடர்பாக முக்கிய ஆவணங்களும் கிடைக்கப்பெற்றதாக சொல்லப்படுகிறது.
அதன்படி நேற்று முன்தினம் முதல்நாள் எம்.ஜி.எம். குழுமத்துக்கு சொந்தமான இடங்களிலும் வருமானவரி சோதனையானது தொடங்கியது. 2 நாட்களாக நடைபெற்ற சோதனையில் பல முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இன்றும் தமிழகம் முழுவதும் உள்ள எம்.ஜி.எம். குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் வருமானவரி சோதனையானது நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று 3வது நாளாக வருமானவரித்துறை சோதனை நடைபெறுவதால் அந்நிறுவனம் பல கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுகிறது. விரைவில் இந்த சோதனை பற்றிய முழு தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
Source, Image Courtesy: One India Tamil