Begin typing your search above and press return to search.
டெல்லி: வாகன விபத்தில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழப்பு.!
ராணுவ வீரர் பிரபாகரன், கடந்த 14ம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் பணி முடித்துவிட்டு, வீடு திரும்பிய நிலையில் வாகன விபத்தில் சிக்கி பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

By : Thangavelu
டெல்லியில் நடந்த சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன் உயிரிழந்தார்.
தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சின்னவாய்க்கால் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பிரபாகரன் 33, இவர் டெல்லியில் ராணுவ படைப்பிரிவில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி திவ்யா 30, என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில், ராணுவ வீரர் பிரபாகரன், கடந்த 14ம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் பணி முடித்துவிட்டு, வீடு திரும்பிய நிலையில் வாகன விபத்தில் சிக்கி பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த டெல்லி போலீசார் உடனடியாக ராணுவ வீரர் உடலை கைப்பற்றி, ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். டெல்லியில் இருந்து விமானம் மூலம் ராணுவ வீரரின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது.
Next Story
