வாக்கு எண்ணிக்கை: கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்த தேர்தல் ஆணையம்.!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழலில், பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் விதித்து வருகிறது.
By : Thangavelu
தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
இதனிடையே நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழலில், பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் விதித்து வருகிறது.
அதே போன்று தேர்தல் ஆணையமும் தேர்தல் நடைபெற்று முடிந்த மாநிலங்களில் சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் ஏஜென்ட்கள் மற்றும் வேட்பாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கூறியிருந்தது. மேலும், தேர்தல் வெற்றிக்கொண்டாடங்களில் யாரும் ஈடுபடக்கூடாது எனவும் கூறியிருந்தது.
இந்நிலையில், மேலும் சில கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே பொதுமக்கள் யாரும் கூடக் கூடாது என்றும் வேட்பாளர்கள், முகவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அளித்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களில் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறியுள்ளது.