மாலத்தீவுகளில் சிக்கிய 10 தமிழக மீனவர்கள்.. அதிரடியாக மீட்ட இந்தியக் கடலோர காவல் படை..
மாலத்தீவுகளில் இருந்து மீட்கப்பட்ட 10 இந்திய மீனவர்கள் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டனர்.
By : Bharathi Latha
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சில மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று இருக்கிறார்கள். அப்பொழுது அவர்கள் எதிர்பாராத விதமாக அவர்களுடைய படக்கில் இயந்திரக்கோளாறு காரணமாக மோட்டார் செயல்படவில்லை. இதன் காரணமாக அருகில் இருந்த மாலத்தீவிற்கு அவர்கள் சென்று இருக்கிறார்கள். ஏப்ரல் பதினாறாம் தேதி சென்ற அவர்கள் இன்று மீட்கப்பட்ட பத்திரமாக சொந்த ஊர்களுக்கு திரும்பி இருக்கிறார்கள். மாலத்தீவு கடல் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட 10 இந்திய மீனவர்கள், மே 6, 2023 அன்று இந்திய கடலோரக் காவல் படையினரால் விசாகப்பட்டினத்திற்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.
இவர்கள், கடந்த ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி கன்னியாகுமரி அருகே உள்ள தேங்காய்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். அவர்கள் பயணம் செய்த படகு இயந்திரக் கோளாறால் மாலத்தீவிற்குச் சென்றதை அடுத்து உதவி ஏதும் இல்லாமல் மீனவர்கள் ஐந்து நாட்கள் திண்டாடினார்கள். ஏப்ரல் 26-ஆம் தேதி, இந்தியக் கடலோர காவல் படையுடன் இணைந்து மாலத்தீவு தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் அவர்களை மீட்டனர்.
பத்து மீனவர்களுள், எட்டு பேர் கேரள மாநிலம் விழிஞ்சம் பகுதியைச் சேர்ந்தவர்கள், இருவர் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர்கள். மீட்கப்பட்ட மீனவர்களுக்கு முதற்கட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், அவர்கள் ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்துள்ளது.
Input & Image courtesy: News