Kathir News
Begin typing your search above and press return to search.

இஸ்லாமிற்கு மதம் மாறச் சொல்லி அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டும் காதலன் - திருப்பூரில் பெண் புகார்!

இஸ்லாமிற்கு மதம் மாறச் சொல்லி அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டும் காதலன் - திருப்பூரில் பெண் புகார்!
X

ThangaveluBy : Thangavelu

  |  6 May 2022 11:04 AM GMT

இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி அந்த நபருடன் இரண்டு மாதங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென்று இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாற கட்டாயப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், ஒன்றாக இருவரும் சேர்ந்திருக்கும் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டுவதாக திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பகுதியை சேர்ந்த இமான் ஹமீப் என்பவர் கரூரை சேர்ந்த பவித்ரா 21, என்ற இளம்பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகியுள்ளார். அதன் பின்னர் சில வாரங்களில் காதலாக மலர்ந்து இருவரும் திருப்பூரில் தனியாக வீடு எடுத்து தங்கி வாழ்ந்து வந்துள்ளனர். அப்போது பவித்ராவை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றுவதற்கு வற்புறுத்தி வந்தாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி மது குடித்துவிட்டு தினமும் பாலியல் ரீதியாக தனக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அவரிடம் இருந்து பவித்ரா தனது சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போதும் விடாத இமான் ஹமீப் தனது மதத்திற்கு மாறு வேண்டும். அப்படி இல்லை என்றால் ஒன்றாக இருந்த அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் பவித்ரா உடனடியாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் இன்ஸ்டாவில் அறிமுகமாகினர் இமான் ஹமீப். அப்போது தன்னை காதலிக்க வற்புறுத்தினார். இதனால் நானும் அவரும், நண்பர்களாக இருந்தோம். ஒரு கட்டத்தில் காதலிக்கவில்லை எனில் தற்கொலை செய்துக் கொள்வேன் என்று இமான் ஹமீப் மிரட்டினார். இதனால் நான் அவரை காதலித்தேன். பின்னர் இருவரும் ஒன்றாக வேலை செய்யலாம் என்று சொல்லி திருப்பூருக்கு அழைத்து சென்றார். அப்போது ஒன்றாக வேலை செய்ய வேண்டும் என்றால் இஸ்லாமிய மதத்திற்கு மாற வேண்டும் என்று கூறினார். எனது பெயரை மதரஸாவாக மாற்றியதும் திருமணம் செய்து கொண்டால் எங்கள் வீட்டில் ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறினார்.

இதற்கு நான் சம்மதம் தெரிவிக்கவில்லை. இருந்தபோதிலும் தனக்கு தானே தாலிக்கட்டிக்கொண்டு ஒன்றாக வேலைக்கு சென்று வந்தோம். வேலை முடிந்த பின்னர் மாலையில் குடித்துவிட்டு தன்னை இஸ்லாமிய மதத்திற்கு மாறுவதற்கு கட்டாயப்படுத்தினார். மேலும், தொழுகை செய்யச் சொல்லி தன்னை அடித்து துன்புறுத்தி வந்தார். அது மட்டுமின்றி தனது சாதியை சொல்லி மிகவும் இழிவாக பேசினார். எனது போனை வாங்கிக்கொண்டு, மதம் மாறவில்லை எனில் உடனடியாக இருவரும் சேர்ந்திருக்கும் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார். இதனால் தனக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தேன். இவ்வாறு பவித்ரா கூறியுள்ளார்.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News