உரிமம் பெறாமல் நடைபெறும் அனைத்து 'விடுதிகளை' கண்டறிய அடிக்கடி ஆய்வு செய்ய உத்தரவு !
தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் அனைத்து கட்டணம் மற்றும் கட்டணமில்லா முதியோர் இலங்களும், தனியார், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்துகின்ற அனைத்து முதியோர் இல்லங்களும், முதியோருக்கான இல்லங்களும், வாடகை விடுதிகள் 2009ம் ஆண்டின் தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல விடுதிகளின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.
By : Thangavelu

அதே போன்று மகளிர் விடுதிகள் நடத்தும் தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள் விடுதிகளை தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள் (ஒழுங்குமுறைப்படுத்தும்) சட்டத்தின்படி விடுதிகள் நடத்துபவர்கள் உரிமம் பெற்று கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் தமிழத்தில் பல விடுதிகள், முதியோர் இல்லங்கள் உள்ளிட்டவை முறையாக உரிமம் பெறாமல் இயங்கி வருகின்றன. இதனால் பெண்களும், முதியோரும் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இது போன்றவற்றுக்கு தீர்வு காண அனைத்து விடுதிகள், முதியோர் இல்லங்கள் உள்ளிட்டவை கடந்த ஜூலை 31ம் தேதிக்குள் கட்டாயம் பதிவு மற்றும் உரிமம் பெற வேண்டும் என்று சமூகநலத் துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து உரிமம் மற்றும் பதிவு செய்யாதவர்கள் மாவட்ட சமூகநலத்துறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்து வந்துள்ளனர். இருந்தபோதிலும் முழுமையாக அனைத்து விடுதிகளிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வந்து சேரவில்லை. எனவே உரிமம் பெறாமல் நடைபெறுவதை கண்டறிய குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை கள ஆய்வு மேற்கொள்ள மாவட்ட சமூகநல அதிகாரிகளுக்கு சமூகநலத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Source: