Kathir News
Begin typing your search above and press return to search.

விநாயகர் சதுர்த்தி தினத்தில் ஜெபயாத்திரைக்கு அழைப்பு ! மதபோதகருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

விநாயகர் சதுர்த்தி தினம் அன்று போட்டியாக ஜெபயாத்திரைக்கு அழைப்பு விடுத்த கோவையை சேர்ந்த கிறிஸ்துவ மத போதகருக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி தினத்தில் ஜெபயாத்திரைக்கு அழைப்பு ! மதபோதகருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!
X

ThangaveluBy : Thangavelu

  |  2 Sep 2021 1:15 PM GMT

விநாயகர் சதுர்த்தி தினம் அன்று போட்டியாக ஜெபயாத்திரைக்கு அழைப்பு விடுத்த கோவையை சேர்ந்த கிறிஸ்துவ மத போதகருக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கோவை, தடாகம் ரோடு செயின்ட் பால்ஸ் பள்ளி மற்றும் பெண்கள் கலை அறிவியல் கல்லூரி தலைவர் போதகர் டேவிட். இவரது லெட்டர் பேடில் கிறிஸ்துவ சகோதர சகோதரிகள் போதகர்கள் மிஷனரிகள் மிஷனரி இயக்கங்களின் தலைவர்களுக்கு அன்பு வேண்டுகோள் என்ற தலைப்பில் அறிவிப்பு ஒன்று சமூக வலை தளங்களில் வைரலானது.

அந்த நோட்டீஸில் செப்டம்பர் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் ஒவ்வொரு ஊரிலும் அவரவர் வாகனங்களில் சென்று ஜெபயாத்திரை நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இவரது நோட்டீஸால் இந்து முன்னணியினர் கொதிப்படைந்தனர். ஏற்கனவே திமுக அரசு விநாயகர் சதுர்த்தி தினத்தில் ஊர்வலங்கள் மற்றும் சிலை வைப்பதற்கு தடை விதித்துள்ளது. இதற்கு மத்தியில் மதபோதகர் அச்சடித்த நோட்டீஸ் இந்துக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியதாக அமைந்தது.

இந்நிலையில், கோவை வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தம்பி சரவணன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று துடியலூர் காவல் நிலையம் முன்பு கூடி மத மோதல்களை தூண்டும் வகையில் செயல்படும் மதபோதகர் டேவிட்டை கைது செய்ய வேண்டும் என புகார் கொடுத்தனர்.

இந்நிலையில், மதபோதகர் டேவிட்டை துடியலூர் போலீசார் இன்று காலை 5.30 மணியளவில் கைது செய்தனர். அவரை கோவை மாஜிஸ்தரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Source, Image Courtesy: Dinamalar

https://www.dinamalar.com/news_detail.asp?id=2835033

Next Story
கதிர் தொகுப்பு
Trending News