Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் துவங்குகிறதா நாட்டு வெடிகுண்டு கலாச்சாரம் - டாஸ்மாக் கடையில் வெடிகுண்டு வீசிய நபர்

டாஸ்மாக் கடை ஊழியர்களை பழிவாங்கும் நபர் ஒருவர் நோக்கில் நாட்டு வெடிகுண்டு சென்னையில் வீசிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் துவங்குகிறதா நாட்டு வெடிகுண்டு கலாச்சாரம் - டாஸ்மாக் கடையில் வெடிகுண்டு வீசிய நபர்
X

Mohan RajBy : Mohan Raj

  |  23 Aug 2022 8:48 AM IST

டாஸ்மாக் கடை ஊழியர்களை பழிவாங்கும் நபர் ஒருவர் நோக்கில் நாட்டு வெடிகுண்டு சென்னையில் வீசிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் கொலை, கொள்ளை போன்ற அச்சத்தில் இருக்கும் பொழுது தற்பொழுது நாட்டு வெடிகுண்டு கலாச்சாரம் துவங்கி இருப்பது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே தாம்பரத்தில் டாஸ்மாக் கடை ஊழியர்களை பழிவாங்கும் நோக்கில் கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ரோட்டில் உள்ள அந்த மதுக்கடைக்கு வந்த இளைஞர் நாட்டு விடுகதை வீசிவிட்டு சென்ற வீடியோ இணையங்களில் நேற்று வேகமாக பரவியது.

உள்ளே ஊழியர்கள் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இது நடந்ததால் யாரும் காயமடையவில்லை இது தொடர்பாக சொக்கலிங்கம் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த வாரம் சொப்கலிங்கம் மதுபோதையில் நாய் குட்டி ஒன்றை துன்புறுத்தியதை அங்கிருந்து ஊழியர்கள் கண்டித்த காரணத்தினால் டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது சொக்கலிங்கம் கோபத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நேற்று அதிகமாக மது அருந்துவிட்டு கிளம்பும்போது சேற்றில் சிக்கியிருந்த அவரது இரு சக்கர வாகனத்தை எடுக்க உதவியாக ஊழியர்கள் யாரும் முன்வராமல் ஆத்திரத்தில் நாட்டு வெடிகுண்டை வீசியது விசாரணைகயில் தெரிய வந்துள்ளது.


Source - Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News