பழங்குடி இருளரை கொன்ற பட்டியலின அதிகாரி - குறியீடு வன்னியருக்கா? வன்னியர்கள் மீது வன்மத்தை கக்குகிறதா கோலிவுட்?
வன்னியர்கள் மீது இனஅழிப்பு செய்ய தயாராகி வருகிறதா தமிழ் சினிமாக்கள். எப்போதும் பட்டியலின மக்களுக்கு என்றும் அநீதியை வன்னியர்கள்தான் இழைப்பது போன்ற காட்சிகள் அவ்வப்போது தமிழ் சினிமாக்களில் அதிகமாக காட்சிப்படுத்தப்படுகிறது. இதனால் சமூதாய ரீதியாக ஒன்றாக இருக்கும் மக்களிடையே சாதி பிரிபினையை தமிழ் சினிமாக்கள் தூண்டிவிடும் விதமாக தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் அமைந்துள்ளது.
By : Thangavelu
தமிழ் சினிமாக்களில் சமீப காலமாக பட்டியலின மக்களுக்கு அநீதியை என்றும் வன்னியர்கள்தான் இழைப்பது போன்ற காட்சிகள் அதிகமாக காட்சிப்படுத்தப்படுகிறது. இதனால் சமூதாய ரீதியாக ஒன்றாக இருக்கும் மக்களிடையே சாதி பிரிபினையை தமிழ் சினிமாக்கள் தூண்டிவிடும் விதமாக அமைகிறது. தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் விதிவிலக்கல்ல.
இது தொடர்பாக பொன்னுசாமி புருஷோத்தமன் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: ஜெய்பீம் திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது, வன்னியர்கள் மீது இனஅழிப்பு செய்ய தயாராகும் பிற சாதிகள். ஜெய் பீம் திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. கம்மாபுரம் (முதனை) இருளர் சமூகத்தை சேர்ந்த ராசாக்கண்ணு என்ற பழங்குடி ஒருவரை போலீசார் அடித்து கொன்ற வழக்கில் தண்டனை அடைந்த போலீஸ் அதிகாரி ஒருவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர். கொல்லப்பட்ட ராசாக்கண்ணுவிற்காக போராடிய கம்யூனிஸ்ட் ஒரு வன்னியர், வழக்காடிய சந்துரு ஒரு வன்னியார் ஆவார்.
ஆனால் இந்த படத்தில் கொலை செய்யும் அதிகாரி ஒரு வன்னியர் எனபதாக குறியீடு வைத்திருப்பார்கள். கொஞ்சம் கூட தார்மீகமும் நேர்மையும் இன்றி இப்படி ஒரு துரோகத்தை இயக்குனர் செய்துள்ளார். இவைகள் எல்லாம் ஏதோ எத்தேச்சையாக நடப்பது போன்று தெரியவில்லை. வன்னியர்களை மோசமானவர்களாகவும் அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பது போன்ற கருத்தை கொஞ்சம் கொஞ்சமாக பிற சாதியினர் திரைப்படங்கள், ஊடகங்கள், அரசியல் பேச்சுகள், செய்திகள், சமூக ஊடகங்கள் வழியாக வன்னியர்கள் மோசமானவர்கள், இவர்கள் கொல்லப்பட்டால் தவறில்லை என்ற ஒரு எண்ணத்தை உருவாக்குகிறார்கள்.
கர்ணன் படத்தில் பேருந்தை உடைத்த காட்சிக்கு உரிமைப்போராக கைத்தட்டி ஆர்பரித்தவர்கள் 40 ஆண்டுகாலம் போராடி பெற்ற 10.5 சதவீத வன்னியர் இடஒதுக்கீட்டை பறித்துக்கொண்ட கோபத்தில் ஓரிரு பேருந்து கண்ணாடியை உடைத்தைவர்களை தூக்கில் போட வேண்டும் என்று எழுதுகிறார்கள்.
வன்னியர்களை தனித்தமிழ்நாடு அடைந்த பின் வன்னியர்களை நாட்டை விட்டு துரத்துவோம், வன்னியர்கள் மாநாட்டில் சுனாமி அடித்துக்கொண்டு போகாதா என்றெல்லாம் தமிழ்நாட்டின் சோ கால்டு முற்போக்கு அரசியல் சக்திகள் பேசியுள்ளனர். வன்னியர்கள் யூதர்களை போல தீவிர ஒற்றுமையை போர்கால அடிப்படையில் கடைபிடிக்கவில்லை எனில் சக தமிழ் மற்றும் திராவிட சாதிகளால் இன அழிப்பு செய்யப்படுவது உறுதி. இயக்குனர் டி ஜே ஞானவேல் ஃபேஸ்புக்கில் உள்ளார், அவரை இந்த போஸ்ட்டின் கமெண்ட்டில் டேக் செய்யவும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Source,Image Courtesy: Facebook