Kathir News
Begin typing your search above and press return to search.

குஷ்புவுக்கு ராஜ்யசபா பதவி உண்மையா ? கசியும் தகவல்கள்.!

குஷ்புவுக்கு ராஜ்யசபா பதவி உண்மையா ? கசியும் தகவல்கள்.!

குஷ்புவுக்கு ராஜ்யசபா பதவி உண்மையா ? கசியும் தகவல்கள்.!

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  8 Nov 2020 10:32 AM GMT

சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு மற்றும் அண்ணாமலை ஆகிய இருவரில் ஒருவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி கொடுக்க வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரங்கள் கூறியதாக தகவல்கள் பிரபலமான ஊடகங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.

கர்நாடகாவில் காலியாகியுள்ள ராஜயசபா எம்பி இடம் ஒன்றை குஷ்புவுக்குதான் கொடுக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர் என்றும் அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் எம்பி பதவி பெறுவதில் குஷ்புவுக்கும், அண்ணாமலைக்கும் இடையே போட்டி நிலவுவதாகவும் அந்த உறுதியற்ற செய்திகள் கூறுகின்றன.

ஆனால் பாஜகவினர் இதுவரை இந்த தகவல்களை மறுக்கவோ அல்லது ஒப்புக் கொள்ளவோ இல்லை. என்ற போதிலும் குஷ்பு தைரியமானவர் என்றும், ஏற்கனவே அவர் காங்கிரசில் இருந்து கொண்டே முத்தலாக் போன்ற பாஜகவின் சீர்திருத்த சட்டங்களை ஆதரித்தவர் என்றும் அவர், தான் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர் என்பதையும் தாண்டி இந்த ஆதரவை அளித்ததாக கூறப்படுகிறது.

எப்போதும் புதிய சீர்திருத்தங்களை வரவேற்கும் அவர் காங்கிரசில் இருந்தபோதே மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையில் ஏராளமான புதுமைகள், அறிவு சார்ந்த விஷயங்கள் இருப்பதாக கூறினார். இந்நிலையில் அவர் பேசும் பேச்சுக்கள், செல்லுமிடங்களில் அவருக்கு கூடும் கூட்டம், ஊடகங்கள் தரும் வரவேற்பு ஆகியவற்றை பார்க்கும் போது தமிழகத்தில் தாமரையை மலரவைக்கும் தனது திட்டத்துக்கு அவர் பங்களிப்பார் என பாஜக சிந்திப்பதாக கூறப்படுகிறது.

இப்போது தமிழகத்துக்கு, மத்தியில் உள்ள அரசால் ஏராளமான மறைமுக நன்மைகள், நேரடி நன்மைகள் கிடைத்துள்ளன. மத்திய அரசின் திட்டங்கள் பலவற்றை மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் அனுபவித்து வருகிறது, ஆனால் இவற்றை சரியான முறையில் மக்களிடம் சரியாக கொண்டு செல்லவில்லை என பாஜக தலைமை கருதுவதாகவும், ஆகவே குஷ்புவை பயன்படுத்தி சரியான பிரச்சாரத்தை தேர்தலுக்கு முன்பே உருவாக்க வேண்டும் என அது விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏற்கனவே தனது திறமைக்கும், உழைப்புக்கும், மக்களிடையே, பெண்களிடையே உள்ள பிரபலத்தன்மைக்கு ஏற்ப திமுகவிலும், காங்கிரசிலும் தனக்கு மரியாதை தரப்படவில்லை என்றும், நான் ஒரு பெண் என்பதாலேயே திமுகவிலும், காங்கிரசிலும் ஓரம்கட்டப்பட்டதாக குஷ்பு கூறியுள்ளார். மேலும் எல்லோரும் தன்னை தேர்தல் நேரத்தில் பிரச்சார நோக்கத்துக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள், ஆனால் அதனால் தனக்கு எந்த பயனும் இல்லை என அவர் பாஜகவிடம் தனது வருத்தத்தை கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில் குஷ்பு பிரச்சாரத்துக்கு செல்லும்போது மதிப்புடன் செல்ல அவருக்கு ஒரு பதவியும் தர பாஜக திட்டமிட்டுள்ளதாகவே கூறப்படுகிறது. அதே சமயம் குஷ்புவுக்கு எந்த பதவி கிடைத்தாலும் மகிழ்ச்சிதான் என அண்ணாமலை தரப்பு வட்டாரங்களும் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் குஷ்பு குறித்த நல்ல அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News