Kathir News
Begin typing your search above and press return to search.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அரிய வகை பொக்கிஷங்கள் கிடைத்தது உண்மையா? கோயில் தீட்சிதர்கள் என்ன சொல்கிறார்கள்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மிகவும் அரிய வகையிலான பொக்கிஷங்கள் கிடைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் செயதிகள் பரவியது உண்மை இல்லை என்று கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அரிய வகை பொக்கிஷங்கள் கிடைத்தது உண்மையா? கோயில் தீட்சிதர்கள் என்ன சொல்கிறார்கள்!

ThangaveluBy : Thangavelu

  |  3 Dec 2021 10:25 AM GMT

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மிகவும் அரிய வகையிலான பொக்கிஷங்கள் கிடைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் செயதிகள் பரவியது உண்மை இல்லை என்று கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.

தமிழகத்தில் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ள சிதம்பரம் நடராஜர் கோயில் மிகவும் பிரபலமானவை ஆகும். இக்கோயில்களுக்கு வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். இந்த கோயில் பல்வேறு அரசர்களால் கட்டப்பட்டது ஆகும். சைவக் கோயில்களில் இது முதமை வாய்ந்தது ஆகும். இக்கோயிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், கடந்த கொரோனா ஊரடங்கு சமயங்களில் மேற்கு கோபுரம் அருகே கற்பக விநாயகர் கோயிலுக்கு எதிரில் உள்ள பைரவர் கோயிலுக்கு கீழே புதிய பூங்கா ஒன்று அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டது. அப்போது அங்கு கீழ் பழங்கால மண்டபம் ஒன்று இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த பணிகள் இரவு நேரங்களில் நடைபெற்றதால் மற்றவர்களுக்கு தெரியவில்லை. தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குழி தோண்டும்போது அரியவகை சிற்பங்கள் மற்றும் பொக்கிஷங்கள் கிடைத்திருப்பதாக பொய்யான தகவல்கள் பரவ ஆரம்பித்தது. இந்த சம்பவம் சிதம்பரம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்திலும் பரபரப்பாக பேசும் பொருளாக மாறியது.

இது தொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கூறும்போது, எந்த விதமான பொருட்களும் கிடைக்கவில்லை. மேற்கு கோபுர உள் வாயிலில் கீழ் மட்டத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மண்டபம் கட்டப்பட்டிருக்கலாம். காலங்கள் மாறும்போது கோயில் மட்டம் உயர்ந்து கீழ் உள்ள மண்டபம் மண்ணால் மூடப்பட்டிருக்கலாம். குழி தோண்டும்போது அரியவகை பொருட்கள் கிடைத்திருப்பதாக கூறப்படும் தகவல்கள் உண்மை இல்லை என்றனர். எந்த செய்தி உண்மை, பொய் என்று ஆராயமலே சமூக வலைதளங்களில் பரப்பிவிடுகின்றனர்.

Source, Image Courtesy: Hindu Tamil


Next Story
கதிர் தொகுப்பு
Trending News