Kathir News
Begin typing your search above and press return to search.

சமையல் எண்ணெயில் இப்படி ஒரு கலப்படமா.. உயர்நீதிமன்ற கிளை புது உத்தரவு.!

சமையல் எண்ணெயில் இப்படி ஒரு கலப்படமா.. உயர்நீதிமன்ற கிளை புது உத்தரவு.!

சமையல் எண்ணெயில் இப்படி ஒரு கலப்படமா.. உயர்நீதிமன்ற கிளை புது உத்தரவு.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Dec 2020 7:56 PM IST

பேக்கிங் செய்யாத சமையல் எண்ணெய்களை சில்லறை விற்பனையில் விற்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை மீறி தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் விற்பனை குறித்து நடவடிக்கை கோரி வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் அருண்நிதி என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் முந்திரி தோலில் தயாரித்த எண்ணெய்யை சமையல் எண்ணெய்யில் கலப்படம் செய்கின்றனர். இது ஆய்வக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கலப்படத்தால் கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.

சட்டப்படி எண்ணெய்யை சில்லறை விற்பனை செய்யக்கூடாது. பேக்கிங் செய்வதுதான் விற்பனை செய்ய வேண்டும். ஆகவே, கலப்பட எண்ணெய் விற்பனை செய்வதை எவ்வகையிலும் அனுமதிக்கக்கூடாது என சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

உணவு பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும் தரமான சமையல் எண்ணெய்களே விற்பனை செய்யப்படுகின்றன என்பதை உறுதி செய்ய வேண்டும். மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்களை சில்லறை விற்பனை, (பேங்கிங் செய்யப்படாதது) செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மாவட்ட வாரியாக ஆய்வகங்கள் எத்தனை உள்ளன? என்பன பற்றிய விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என கூறியுள்ளது. இந்த வழக்கு ஜனவரி 18ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News