Kathir News
Begin typing your search above and press return to search.

"ஒரு சென்ட் நிலம் கூட ஈஷா ஆக்கிரமிப்பு செய்யவில்லை"- வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெளிவு !

ஒரு சென்ட் நிலம் கூட ஈஷா ஆக்கிரமிப்பு செய்யவில்லை-  வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெளிவு !

DhivakarBy : Dhivakar

  |  25 Dec 2021 11:11 AM GMT

"ஈஷா யோகா, எங்களுக்கு கொடுத்த அறிக்கையின்படி ஒரு சென்ட் நிலம் கூட ஆக்கிரமிப்பு இல்லை என்று தெரியவருகிறது" என்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.


திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திரு ராமச்சந்திரன் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அமைச்சர் கே.என் நேரு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இக்கூட்டத்தில் பல பிரச்சினைகள் குறித்து விவாதித்த நிலையில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது ஈஷா குறித்து கருத்து தெரிவித்திருப்பதாவது :


ஈஷா யோகா எங்களுக்கு கொடுத்த அறிக்கையின்படி ஒரு சென்ட் நிலம் கூட ஆக்கிரமிப்பு இல்லை என்று தெரிய வருகிறது. இருந்தாலும் அதிகாரிகள் கொண்ட குழு மூலம் மீண்டும் ஈஷா யோகா இருக்கும் இடத்தை ஆய்வு செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். காருண்யா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் வந்துள்ளது கண்டிப்பாக முறைப்படி அதனை ஆய்வு செய்வோம் என்று அமைச்சர் ராமச்சந்திரன் தன் கருத்தை பதிவு செய்தார்.


"ஈஷா யோகா மையம் வனப்பகுதியையும், யானைகள் வழித்தடத்தையும் ஆக்கிரமிப்புகள் செய்யப்படவில்லை" என்று ஆர்.டி.ஐ அறிவித்திருந்த நிலையில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனின் கருத்து முக்கியத்துவம் பெறுவதாக அமைந்துள்ளது.

Nakkheeran

Next Story
கதிர் தொகுப்பு
Trending News