கோவையில் 43 கிராமங்களை தத்தெடுத்து நிவாரணப் பணிகளை வழங்கும் ஈஷா மையம்.!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளது.
By : Thangavelu
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளது.
அது போன்ற ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நிலைமையில் பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் மக்களுக்கு தேவையான உணவு, மற்றும் மளிகை பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், கொரனோ நிவாரணப் பணிகளுக்காக ஈஷா அறக்கட்டளை சார்பில் கோவை மாவட்டத்தில் 43 கிராமங்களை தத்தெடுத்து நிவாரணப் பணிகளை மேற்கொள்கிறது. இதன் மூலம் 17 பஞ்சாயத்துகளில் உள்ள 2 லட்சம் கிராம மக்கள் பயன் பெற்றுள்ளனர் என கூறப்படுகிறது.
தினமும் ஈஷா சார்பில் பிரம்மசாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட ஏராளமானோர் இணைந்து பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். தினமும் சுமார் 1.2 லட்சம் பேருக்கு கபசுப குடிநீர் வழங்குவது, ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதற்கான சிம்மக்ரியா மற்றும் சாஷ்டாங்கா உடற்பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அது மட்டுமின்றி பொதுமக்களுக்கு சானிடைசர், கிருமிநாசினி உள்ளிட்டவைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.