Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா பெருந்தொற்று: 18 மயானங்களில் 3 மாதங்களுக்கு இலவச தகனம்.. ஈஷா அறக்கட்டளை அறிவிப்பு.!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை இலவசமாக தகனம் செய்யப்படும் என்று ஈஷா அறக்கட்டளை அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று: 18 மயானங்களில் 3 மாதங்களுக்கு இலவச தகனம்.. ஈஷா அறக்கட்டளை அறிவிப்பு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  31 May 2021 5:00 PM IST

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை இலவசமாக தகனம் செய்யப்படும் என்று ஈஷா அறக்கட்டளை அறிவித்துள்ளது.

இது பற்றி ஈஷா அறக்கட்டளை தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கோவிட் தொற்றால் காலமானவர்களுக்கு கட்டணமின்றி தகன சேவையை அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கும். இந்த உயிர்கொல்லி வைரசுக்கு அன்பிற்குரியவர்களை பறிகொடுத்தோருக்கு ஆதரவாய் இருக்க விரும்புகிறோம்.

ஈஷா மயானங்களில், காலமானவர்களை உகந்த சூழலில் நுண்ணுணர்வுடன் விடுவிக்க தன்னார்வத் தொண்டர்கள் அயராது உழைக்கிறார்கள். இது வாழ்வோருக்கும் விடைபெறுவோருக்கும் மிகவும் முக்கியம். ஆசிகள் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஈஷா சார்பில் கோவை மாவட்டத்தில் 12 மயானங்கள், சென்னையில் 4, நாமக்கள் மற்றும் நெய்வேலியில் தலா ஒன்று என மொத்தம் 18 மயானங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News