வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசு - கருப்பட்டி தயாரிப்பாளர் அவதி!
சொன்னதை நிறைவேறாத தமிழக அரசின் நடவடிக்கை காரணமாக கருப்பட்டி தயாரிப்பு பாதிக்கப்பட்டு இருப்பதாக தயாரிப்பாளர் கூறுகிறார்கள்.
By : Bharathi Latha
பனைத் தொழில் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ரேஷன் கடைகளில் கருப்பட்டி விற்பனை செய்யப்படும் என்று கடந்த பட்ஜெட்டின் போது தமிழக அரசு அறிவிப்பை கொடுத்தத. ஆனால் அதை இன்னும் அமல்படுத்தவில்லை. இதனால் போதிய வருமானம் இன்றி பணி தொழிலாளர்கள் பல்வேறு தொழில்களுக்கு தற்போது மாறக்கூடிய நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை, பனை மரங்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் தமிழக அரசின் சார்பில் தற்போது வரை எடுக்கப்படவில்லை.
இந்த நிலைமை மேலும் நீடித்தால் காலப்போக்கில் கருப்பட்டி தொழில் காணாமல் போகிவிடும் என்ற தொழிலாளர்கள் தங்களுடைய வேதனைகளை தற்போது தெரிவித்து வருகிறார்கள். தமிழக அரசின் மாநில மரமான பனைமரம் ராமநாதபுரம் மாவட்டத்தின் அடையாளமாய் உள்ளது மரத்தின் ஓலை, மட்டை என பல்வேறு பொருட்களை பயன்படுத்தி பெட்டிகள், பாய்கள் மற்றும் பதநீர், கருப்பட்டி செய்கிறார்கள். பல்வேறு சீசன்களின் போது பதநீர், நுங்கு போன்றவையும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பல மாவட்டத்தை முக்கிய பல்வேறு இடங்களில் கருப்பட்டி தொழில் வியாபாரிகள் இந்த தொழிலை செய்து வருகிறார்கள்.
இவர்களிடம் மொத்த வியாபாரிகள் கிலோ 160 முதல் 120 வரை வாங்கி செல்கிறார்கள். தொழிலாளர்கள் ஆண்டு தோறும் கருப்பட்டிக்கு எதிர்பார்த்த விலையை விட அவர்களுக்கு நஷ்டம் தான் அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. அரசே விளையும் நிர்ணயம் செய்து பனை தொழிலாளர்களிடம் கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளில் விற்க தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்கள். அதன் எதிரொலியாக கடந்த பட்ஜெட்டில் ரேஷனில் கருப்பட்டி விற்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த திட்டம் தற்போது வரை அமல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பாரம்பரிய கருப்பட்டி காலப்போக்கில் கரைந்து போகும் என பனைத் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்து இருக்கிறார்கள்.
Input & Image courtesy: Dinamalar