ஜெய் பீம் படத்தின் உண்மை நாயகன்: குரவர் சமூகத்திற்காக போராடிய கோவிந்தனின் பரபரப்பு தகவல்!
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தில் வன்னியர்களை மிகவும் தவறாக சித்தரித்து காட்சிகள் மையப்படுத்தப்பட்டுள்ளது. அப்படத்தில் இருளர் சமூகத்திற்காகவும், பட்டியலின சமூகத்திற்கும் கெடுதல் செய்பவர்கள் வன்னியர்கள் என்ற குறியீடு மூலமாக காட்சிப்படுத்தப்பட்டள்ளது. இதற்கு தமிழகத்தில் வன்னியர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
By : Thangavelu
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தில் வன்னியர்களை மிகவும் தவறாக சித்தரித்து காட்சிகள் மையப்படுத்தப்பட்டுள்ளது. அப்படத்தில் பட்டியலின சமூகத்திற்கு கெடுதல் செய்பவர்கள் வன்னியர்கள் என்ற குறியீடு மூலமாக காட்சிப்படுத்தப்பட்டள்ளது. இதற்கு தமிழகத்தில் வன்னியர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இயக்குநர் மோகன் ஜி, தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பாதிக்கப்பட்ட ராஜாக்கன்னு என்ற குரவர் சமூகத்தை சார்ந்த மனிதருக்காக களத்தில் போராடி திருமணம் கூட செய்யாமல் உடன் நின்றவர் வன்னியர் இனத்தை சேர்ந்தவர்.. மேலும் உடன் நின்ற தலைவர் பாலகிருஷ்ணன் ஐயா வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்.
ஆனால் ஜெய் பீம் திரைப்படத்தில் கொலை செய்த அந்தோனிசாமி என்ற பெயரை குருமூர்த்தியாக மாற்றி வன்னியர் சமூக அடையாளம் கொண்டு காட்டியதில் உள்ளது உள்நோக்க அரசியல்.. ஜெய்பீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொன்னவர்கள் அதை பின்பற்ற வேண்டும் என பதிவிட்டுள்ளார். மேலும், இருளர் சமூதாயத்திற்காக நீதி கேட்டு போராடிய கோவிந்தன் பேட்டி அளித்த வீடியோவையும் இணைத்துள்ளார்.
Source, Image Courtesy: Twiter