"ஜெய்பீம்" சூர்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த வட இந்திய ராஜபுத்திரர்கள்: காடுவெட்டி குருவுக்காக சென்னை கிளம்ப தயார்!
தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் உள்ள ஷத்திரியர்களின் தலைவராக காடுவெட்டி ஜெ.குரு இருந்தார். அவர் மறைவுக்கு பின்னர் அவரை வன்னியர்கள் கடவுளாக பார்த்து வருகின்றனர்.
By : Thangavelu
தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் உள்ள ஷத்திரியர்களின் தலைவராக காடுவெட்டி ஜெ.குரு இருந்தார். அவர் மறைவுக்கு பின்னர் அவரை வன்னியர்கள் கடவுளாக பார்த்து வருகின்றனர்.
இதனிடையே சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ஜெய்பீம் திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. அந்த திரைப்படத்தில் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி ஜெ.குரு பெயரையும் மற்றும் வன்னியர் சங்கத்தின் குறியீடையும் தவறாக சித்தரித்தனர். இதற்கு பாமக மற்றும் வன்னியர் அமைப்புகள் கடும் கண்டனங்களை பதிவிட்டது.
இதனிடையே வடஇந்தியாவில் உள்ள சத்திரியர்களுக்கான அமைப்பான ஸ்ரீ ராஜ்புத் கருணா சேனா வன்மையாக கண்டித்துள்ளது. மேலும், வன்னியர் தலைவரான ஜெ.குரு மற்றும் வன்னியர்களை இழிவாக சித்தரித்த சூர்யாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி வன்னியர்களுக்காக குரல் கொடுக்க சென்னைக்கு வரத்தயார் என்றும், அப்படி வந்தால் பிரச்சினை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம் என்றும், ஜெய்பீம் திரைப்பட குழுவுக்கு மகிபால் சிங் மஹரான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சித்தூர் ராணி பத்மினியின் கதை, பத்மாவதி என்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித்திருந்தார். அந்த படத்தில் சித்தூர் ராணி பத்மினியின் வரலாறு பற்றி மிகவும் தவறாக காண்பிக்கப்பட்டது. இதற்கு ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள ராஜபுத்திரர்கள் வம்சத்தை சேர்ந்தவர்கள் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினர். இதன் காரணமாக அப்படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி பொது வெளியில் மன்னிப்பு கேட்டார். அதன் பின்னரே போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
அந்த போராட்டத்தின் தலைவரான சஞ்சய் லீலா பன்சாலி, தீபிகா படுகோனேயின் மூக்கை அறுப்போம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், ஸ்ரீராஜ்புத் கர்ண சேனா என்ற அமைப்பு தற்போது வன்னியர்களை இழிவாக ஜெய்பீம் படத்தில் காட்டியுள்ளதை பார்த்து கண்டனங்களை பதிவிட்டுள்ளது.
இதற்காக தமிழகத்திற்கு வந்து போராட்டம் நடத்தவும் தயார் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அப்படி தமிழகம் வந்தால் மிகப்பெரிய வன்முறையாக மாறிவிடும் என்ற காரணத்தினால் தற்போது அமைதி காப்பதாக அந்த அமைப்பின் தலைவர் மகிபால்சிங் மஹரான தெரிவித்துள்ளார். இதற்காக ஜெய்பீம் படக்குழு மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜெய்பீம் திரைப்படம் மாநிலம் கடந்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனவே சூர்யா தாமதம் செய்யாமல் உடனடியாக வன்னியர்களிடம் பொது வெளியில் மன்னிப்பு கோரினால் மட்டுமே இப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு கிடைக்கும் என அந்த அமைப்பின் தலைவர்கள் கூறியுள்ளனர். நேற்று அந்த படத்தின் இயக்குனர் ஞானவேல் வருத்தத்தை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Asianet News