ஜல்லிக்கட்டு வழக்குகள் வாபஸ்.. பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர்.!
ஜல்லிக்கட்டு வழக்குகள் வாபஸ்.. பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர்.!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி கடந்த 2017ம் ஆண்டு தமிழகம் முழுவதும் மாணவர்கள், பொதுமக்கள் என பல லட்சம் மக்கள் ஒன்றாக போராட்டம் நடத்தினர்.
அதே போன்று சென்னை மெரினாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். அப்போது போலீசாருக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் மீது வழக்குகள் போடப்பட்டது.
இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது போலீசார் மீது தாக்குதல் நடத்தியது மற்றும் வாகனங்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட வழக்குகளை தவிர்த்து, மற்ற வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்று கூறினார்.