தமிழகத்தில் பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறுமா? நீதிமன்றத்தின் பதில் என்ன?
தமிழகத்தில் பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் முக்கிய விசாரணை.
By : Bharathi Latha
தமிழகத்தில் பொங்கல் திருவிழா அன்று நடைபெறும் மிகவும் முக்கியமான விழாவாக ஜல்லிக்கட்டு பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஜல்லிக்கட்டு உள்ளிட்ட விளையாட்டுகள் விலங்குகளை கொடுமைப்படுத்தும் செயல் இது போன்ற விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது எனவும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பு சட்டங்களை ரத்து செய்ய கோரியும் பீட்டா அமைப்பு மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் பல்வேறு மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்கள். பல்வேறு மாநிலங்கள் மற்றும் அரசியல் விதிகள் தொடர்பான மனுக்கள் 2018 ஆம் ஆண்டு ஐந்து நீதிபதிகள் முன்னிலையில் அமர்வுக்கு வந்தது.
அப்பொழுது ஜல்லிக்கட்டு உள்ளிட்ட விலங்குகளை முன்னிலைப்படுத்தும் விளையாடப்படும் விளையாட்டுக்கள் விலங்குகள் வகை தடுப்புச் சட்டம் விதிமுறைகளை மீறுகின்றனவா? ஜல்லிக்கட்டு சக்கடி விளையாட்டுகள் ஆதரவாக தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள சட்டங்கள் அரசியல் சாசனத்திற்கு எதிரான இந்த தொடர்பான பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் விரிவான விசாரணை நடத்த உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்த விளையாட்டு இதனால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு எப்பொழுதும் மரியாதை உண்டு.
காங்கேயம், ஆலம்பாடி, புளிக்குழம்பு, பர்கூர் ஆகிய ஐந்து நாட்டு மாடுகள் இரண்டு வகையான நாட்டு எருமை மாடுகள், 10 வகையான ஆடுகள் உள்ளிட்ட பாரம்பரிய நாட்டு விலங்கு இனங்கள் தமிழகத்தில் உள்ளன இதில் ஐந்து மாற்று இனங்கள் பால் உற்பத்தி பெரிய அளவில் ஈடுபடவில்லை என்றால் விவசாயி பணியில் முக்கிய பங்காற்றியது. பின்னர் ஆனால் சமீபத்தில் அவற்றின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு பிறகு 2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட, சர்வே முடிவில் அடிப்படையில் காங்கேயம் மாடுகள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 577 ஆக அதிகரித்துள்ளது. தெரிய வந்திருக்கிறது ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்வதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். நாட்டு இன மாடுகளில் வளர்க்கும் ஆவல் இல்லாமல் போய்விடும். எனவே ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் ஜல்லிக்கட்டு குறித்த இறுதியான முடிவு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் தான் இருக்கிறது.
Input & Image courtesy: News 18