மற்ற கல்லூரிகளில் இல்லாத ராகிங் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் மட்டும் எப்படி - சி.எம்.சி கல்லூரி ஒழுக்கம் குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள்
வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் ராகிங் நடந்தது ஏன் இடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

By : Mohan Raj
வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் ராகிங் நடந்தது ஏன் இடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களை சில மூத்த மாணவர்கள் அரை நிர்வாணமாக்கி துன்புறுத்தி விவகாரம் தொடர்பாக வழக்கில் நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. இது தொடர்பாக நீதிபதிகள் மற்ற கல்லூரிகளில் நடக்காத ராக்கிங் இது போன்ற செயல் அங்கு மட்டும் நடந்தது ஏன் அதனை முன்கூட்டியே தடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர்.
வழக்கு விசாரணையின் போது ஆஜரான கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் தரப்பு வழக்கறிஞர் ஏழு மாணவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் காரணமாக அவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தெரிவித்தார். அப்போது நீதிபதிகள் கல்வி நிறுவனங்களில் ஒழுக்கம் என்பது முக்கியமானது அவை இல்லாமல் மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்றாலும் பயனில்லை என தெரிவித்தார்.
