Kathir News
Begin typing your search above and press return to search.

முதன்முறை பக்தர்கள் இன்றி வடலூர் ஜோதி தரிசன விழா!

முதன்முறை பக்தர்கள் இன்றி வடலூர் ஜோதி தரிசன விழா!

ThangaveluBy : Thangavelu

  |  18 Jan 2022 10:54 AM GMT

கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை பூசத்திருவிழாவின் போது 7 திரைகள் விலக்கப்பட்டு 6 கால ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம்.

அதே போன்று 151வது தைப்பூசம் விழா நேற்று (ஜனவரி 17) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் மிகவும் முக்கிய நிகழ்ச்சி தைப்பூச ஜோதி தரிசனம் ஆகும். அதன்படி இன்று காலை 6 மணிக்கு நடைபெற்றது. இதில் முதன் முறையாக பக்தர்கள் இன்றி ஜோதி தரிசன விழா நடைபெற்றது.

இதில் வள்ளலாரின் பாடல்கள் பாடப்பட்டது. அதன்பின்னர் 7 திரைகள் விலக்கப்பட்டு அதற்கான ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணத்தை காட்டி பக்தர்கள் பங்கேற்க அரசு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் வெளிமாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர். இதில் ஒரு மணி, இரவு 7 மணி, 10 மணி, நாளை காலை 5.30 மணி என்று ஆறு சமய காலங்களில் ஏழு திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Daily Thanthi


Next Story
கதிர் தொகுப்பு
Trending News